கார்த்தியின் 'சர்தார்' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

karthi sardar ott release date announced

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான'சர்தார்' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு இயக்குநர் மித்ரனுக்கு டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றைப் பரிசாகத்தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.வருகிற 18ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை ஆஹா ஓடிடி தளம் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து புதிய வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

actor karthi Sardar
இதையும் படியுங்கள்
Subscribe