/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/37_10.jpg)
இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'சர்தார்'. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். நீளமான தலைமுடி, நரைத்த தாடி, சுருக்கங்கள் நிறைந்த முகத்துடன் நடிகர் கார்த்தி காட்சியளிக்கும் வகையில் வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா இரண்டாம் அலை காரணமாக சில மாதங்களுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கரோனா பாதிப்பின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கு ஒன்றில் முக்கிய சண்டைக்காட்சியை படக்குழு படமாக்கிவருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான காட்சிகள் இந்த அரங்கிற்குள் படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)