'சர்தார்...' கார்த்தியின் அடுத்த பட மோஷன் போஸ்டர் வெளியீடு!

karthi

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'சர்தார்'. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீளமான தலைமுடி, நரைத்த தாடி மற்றும் சுருக்கங்கள் நிறைந்த முகத்துடன் நடிகர் கார்த்தி காட்சியளிக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

actor karthi
இதையும் படியுங்கள்
Subscribe