Advertisment

நடிகர் சூர்யா குறித்த சஸ்பென்ஸை வெளியிட்ட கார்த்தி!

surya karthi

Advertisment

'தீரன்' படத்தையடுத்து நடிகர் கார்த்தி தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தின் டீசர் சென்ற ஞாயிறு அன்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் வெளியான இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நாயகியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானிசங்கர், அர்த்தனா, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, பானுபிரியா, மவுனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை, விழாவில் வெளியிட்ட பிறகு நடிகர் கார்த்தி பேசும்போது.... "இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்" எனவும் அந்த கதாபாத்திரத்தை சஸ்பென்சாக வைத்துள்ளதாகவும் அறிவித்தார்.

karthi kadaikuttysingam
இதையும் படியுங்கள்
Subscribe