கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில் “ரெமோ” இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

karthi

இப்படத்தில் “கீதா கோவிந்தம்” புகழ் நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து 50 நாட்கள் அங்கேயே படப்பிடிப்பு நடைபெறுகிறது. கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கைதி” டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.