Advertisment

யுவனுக்கு நடிகர் கார்த்தி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

karthi presented for premium watch yuvan shankar raja

கடந்த 2007 ஆம்ஆண்டு இயக்குநர்அமீர் இயக்கத்தில் வெளியான'பருத்திவீரன்' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கார்த்திநடிகராக அறிமுகமானார். மதுரை கதைக்களத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தின் இசையில் யுவன் சங்கர் ராஜா மிரட்டியிருப்பார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான 'நான் மகான் அல்ல', 'பையா', 'பிரியாணி', 'சுல்தான்' உள்ளிட்ட படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார். இவர்கள்கூட்டணியில் வெளியானபாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கார்த்தியும் யுவன் சங்கர் ராஜாவும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பதால் இருவரும் சிறு வயதில்இருந்தே நெருங்கியநண்பர்களாக இருந்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகர் கார்த்தி யுவன் சங்கர் ராஜாவுக்குஅன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டிநடிகர் கார்த்தி விலை உயர்ந்த பிரீமியம் கை கடிகாரத்தை பரிசளித்து நட்பு பாராட்டியுள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள 'விருமன்'படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Advertisment

actor karthi viruman yuvan shankar raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe