Advertisment

அரவிந்த் சாமியுடன் மோத ஆர்வமாக இருக்கும் கார்த்தி

karthi premkumar movie update

ராஜுமுருகன் இயக்கும் 'ஜப்பான்' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை முடித்துவிட்டு 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ள நிலையில் அந்தப் பதிவில், "என்னுடைய அடுத்த படம் அழகான காதல் கதையை வழங்கிய 96 பட இயக்குநர், பிரேம்குமார் இயக்கத்தில் தான். இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிக்கின்றனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2டி நிறுவனம் விரைவில் படப்பிடிப்பு தேதி குறித்து அறிவிப்பார்கள் எனப் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த கார்த்தி பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகதனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

எனவே 2டி நிறுவனம் விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், கடைக்குட்டி சிங்கம், விருமன் படத்தைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகதிரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

actor karthi aravind swamy pc sriram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe