karthi praised aishwarya raajesh farhana movie

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (12.05.2023) திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன.இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, "மதநல்லிணக்கம், சமூக ஒற்றுமை, அன்பு ஆகிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் எங்களுக்கு, அரசால் முறையாக தணிக்கைசெய்யப்பட்டு வெளியாக உள்ள ஃபர்ஹானா திரைப்படம் குறித்து ஒரு சிலர் உருவாக்கும் சர்ச்சைகள் வேதனையைத் தருகிறது. ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" என அறிக்கை வெளியிட்டது.

Advertisment

இப்படத்தை பற்றிய பதிவு வெளியிட்ட செல்வராகவன், "ஃபர்ஹானா' படத்தை பற்றி என்ன சொல்வது. என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகுபடுத்தியுள்ளார். இது போன்ற காவியபடத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "நமது உறவுகளில் பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. அந்த அழுத்தத்தின் அனுபவத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது ஃபர்ஹானா. வசனங்கள் அருமையாக இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது டீமுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.