Advertisment

ரைட்ல எம்.ஜி.ஆர், லெஃப்ட்ல கலைஞர்... கார்த்தி ரசிகர்கள் அட்ராசிட்டி

karthi political entry poster goes viral

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக கார்த்தி அறிமுகமானார். இப்படம் சிறுசு பெருசு என பல தரப்பிலும்ஹிட்டடிக்க அடுத்தாக'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'நான் மகான் அல்ல', 'கொம்பன்', தீரன், கைதி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். மேலும் நடிப்பைதண்டிதனது அண்ணன்சூர்யாவை போன்றுஉழவன் என்ற பெயரில்அறக்கட்டளையை தொடங்கிமக்களுக்கு நலத் திட்டங்களைசெய்து வருகிறார். மற்ற முன்னணி நடிகர்கள் போலவே இவரும் கணிசமான ரசிர்களைவைத்துள்ளார். பொதுவாக சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர்களை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பது வழக்கமாகி விட்டது. அதிலும்மதுரை மாவட்ட ரசிகர்கள் எல்லாவற்றிக்கும் மேலே சென்று அவர்கள் விரும்பும் ஹீரோக்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்புவார்கள்.

Advertisment

அந்த வகையில் நடிகர் கார்த்திக்கும்ஒரு அரசியல் போஸ்டரைஒட்டி மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். வரும் 25 ஆம் தேதி கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் வலது புறத்தில் எம்.ஜி.ஆரையும், இடது பக்கத்தில் கலைஞரையும் வைத்து நடுவில் தலைமைச் செயலகம்முன்பு கார்த்தி நிற்பது போன்றும்இவர்களது வழியில்கார்த்தியும் அரசியலில் என்ட்ரி கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

fans madurai actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe