/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/86_26.jpg)
கார்த்தி, தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்க கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிக்கிறது.
இந்த நிலையில் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கவுள்ளதாகக்கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பதாகவும்படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)