தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் கார்த்தி, கடந்த 2011ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் 'உமையாள்' என்ற பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், இந்தக்குழந்தைக்கு ‘கந்தன்’ என பெயரிட்டுள்ளதாக கார்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக ‘கந்தன்’என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.