karthi nalan kumarasamy movie update

Advertisment

கார்த்திதனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் ராஜுமுருகன் இயக்க கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைபணிகளை ஜி.வி.பிரகாஷ்குமார் மேற்கொள்கிறார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிக்கிறது.

இப்படத்தை அடுத்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியில் சில வெப்சீரிஸில் நடித்து பிரபலமாகியுள்ள காயத்ரி பரத்வாஜ் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது.

காயத்ரி பரத்வாஜ்இந்தியில் பிரபலமானதைத்தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் மூலம் தென்னிந்திய மொழியில் அறிமுகமாகவுள்ளார். இதைத்தொடர்ந்து கார்த்தியுடன் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் தமிழிலும் அறிமுகமாகவுள்ளார்.