geagzvz

‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'சர்தார்'. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் 'தேவ்' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நீளமான தலைமுடி, நரைத்த தாடி, சுருக்கங்கள் நிறைந்த முகத்துடன் நடிகர் கார்த்தி காட்சியளிக்கும் இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகிவந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா 2ஆம் அலை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment