கார்த்தி தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. மேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இப்படங்களை அடுத்து டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’ படத்தில் நடிக்கிறார். இப்படம் 1960களில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமென கூறுகிறார்கள். இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் மற்றும் பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளனர். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகே 1960 காலகட்டத்தை நினைவு படுத்தும் பிரத்தேயகமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ஆச்சரிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.