/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/227_20.jpg)
'ஜப்பான்' படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வந்தார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.
கார்த்தியின் 27வது படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சூர்யா,ஜோதிகாவின்2டி நிறுவனம் தயாரிக்கிறது.கோவிந்த்வசந்தா இசையமைக்கிறார். மேலும்ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண்,ஜெயபிரகாஷ்உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும்சின்னதிரைநடிகை ஸ்வாதிகொண்டேஇப்படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்துள்ளதாகக்கடந்த பிப்ரவரியில் படக்குழு தெரிவித்தது. இது தொடர்பானவீடியோவையும்அப்போது படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தின்டைட்டில்மற்றும்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டரைவெளியிட்டுள்ளது படக்குழு. ஏற்கெனவே இப்படத்திற்குமெய்யழகன்எனத் தலைப்புவைக்கப்பட்டதாகத்தகவல் வெளியான நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. மேலும்போஸ்டரில்அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி இடம்பெற்றுள்ளனர். இந்தப்போஸ்டரைபடத்தின் தயாரிப்பாளர் சூர்யா தனதுஎக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/229_15.jpg)
இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை (25.05.2024) கார்த்தியின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தப் போஸ்டரைப் படக்குழு பகிர்ந்துள்ளது. இதில் கார்த்தி காளமாட்டோடு இருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)