karthi Meiyazhagan release update

கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மே 5ஆம் தேதி வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்துள்ளார். மெய்யழகன் என்ற தலைப்பில் தயாராகும் இந்த படம் கார்த்தியின் 27வது படமாக உருவாகிறது. இப்படத்தில் அரவிந்த்சாமி ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்த நிலையில் மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் எனப்படக்குழு தெரிவித்து ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment