karthi like kamal - sardar movie dubbing starts

Advertisment

கார்த்திக், இயக்குநர் முத்தையா இயக்கும் 'விருமன்' படத்திலும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்துள்ளார். இதில் 'விருமன்' வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் 'பொன்னியின் செல்வன் 1' படம் செப்டம்பர் 30-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடிக்கிறார். தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டப்பிங் பணிகளின் போது கார்த்தியுடன் நடந்த உரையாடல் வீடியோவை இயக்குநர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மித்ரன், கார்த்தியிடம் "நாயகன் கமல் சார் மாதிரி கொஞ்சம் பேசுங்கள், ஏனென்றால் இந்த வசனம் அதிலிருந்து இன்ஸ்பைர் ஆகி எழுதினது" என்கிறார். அதற்கு கார்த்தி "எங்க நீங்க பேசி காமிங்க.., நமக்கு என்ன வருமோ அந்த ஸ்டைல்ல போய்டுவோம்" என்று கலகலப்பாக சொல்கிறார். பின்பு "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் நாற்பதாயிரம் பேருக்கு தெரியுற மாறி பண்ணனும்" என்று படத்தில் இடம்பெற்ற வசனத்தை டப்பிங் பேசுகிறார் கார்த்தி.