கார்த்தி, ஜோதிகா முதன் முறையாக நடிக்கும் படம் தொடக்கம்...

தமிழில் பாபநாசம் படத்தை நடிகர் கமலை வைத்து இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து நடிகர் கார்த்திக், ஜோதிகா வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

karthi

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் தமிழில் அவருக்கு இது இரண்டாவது படம். இன்னும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை, சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் குறித்து இதுவரை தகவல்களே வந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ce525b9f-c45a-49e3-a035-a62afbb9662c" height="187" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_5.jpg" width="420" />

இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானபோதே கார்த்தி ட்விட்டரில், “அண்ணியுடன் முதல் முறையாக நடிக்க இருப்பது செம த்ரில்லாக இருக்கிறது” என்றார். சூர்யா, நான் இப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

karthick
இதையும் படியுங்கள்
Subscribe