/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/477_2.jpg)
'சுல்தான்' படத்திற்குப் பிறகு கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குநர் மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்திலும் நடித்து வருகிறார். 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் தமிழ், வெற்றிமாறனிடம் ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)