Advertisment

ஹனுமான் யூனிவர்ஸில் இணையும் கார்த்தி

karthi to join hanuman universe

ஷாலிவுட்டில் ‘மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்’ போன்று தமிழில் ‘லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ என்ற தலைப்பில் கைதி, விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதே போல் தெலுங்கில் இயக்குநர்பிரசாந்த் வர்மா, தன்னுடைய இயக்கத்தில் வெளியான ஹனுமான் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ்’ என்ற தலைப்பில் சூப்பர் ஹீரோ படங்களை எடுக்க முடிவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக ‘சிம்பா’ என்ற படத்தையும் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸில் கார்த்தி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் நடந்த கார்த்தியின் மெய்யழகன் பட நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரசாந்த் வர்மா, சில மாதங்களுக்கு முன்பு கார்த்தியை சென்னையில் சந்தித்தேன் அவரை விரைவில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸில் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்கு இன்னும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisment

அதன் பிறகு பேசிய கார்த்தி, பிரசாந்த் வர்மா சொன்ன ஸ்கிரிப்ட் எனக்கு முன்பே பிடித்திருந்தது என்று கூறி விரைவில் அதற்கான பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்தார். அந்த படத்தின் மைய கருத்து நன்றாக இருப்பதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் கூறினார். மேலும் அந்த திரைப்படம் மாஸான படமாக இருக்கும் என்றார். ஏற்கனவே கைதி படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸில் ‘கைதி 2’ படத்தில் கார்த்தி கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸிலும் அவர் இணையவுள்ளதாக தெரியும் சூழலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

actor karthi tollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe