பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் கார்த்தி பட அப்டேட்

karthi japan movie update

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில்அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரதுகவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில், கதாபாத்திரஅறிமுக வீடியோ நாளை (25.05.2023) காலை 11 மணியளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நாளை கார்த்தியின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இப்படத்தின் அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பும் அதில் இடம்பெறும் என பரவலாகப் பேசப்படுகிறது.

actor karthi Japan movie raju murugan
இதையும் படியுங்கள்
Subscribe