Advertisment

“இந்தியா முழுவதும் ஜப்பான் மேல் 182 வழக்கு” - எதிர்பார்ப்பை அதிகரித்த கார்த்தி படம்

karthi japan movie teaser released

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.கார்த்தியின் 25வது படம் என்பதால் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை பார்க்கையில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை ஒருவன் கொள்ளையடிப்பதாக காட்டப்படுகிறது. இது ஜப்பான் கதாபாத்திரத்தின் வேலையாக இருக்கக் கூடும் என போலீஸ் யூகிக்கிறார்கள். இந்தியா முழுவதும் ஜப்பான் மேல் 182 வழக்கு உள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் 4 மாநிலங்கள் ஜப்பானைதேடுவதாகவும் யார் கையிலும் இதுவரை ஜப்பான் சிக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.

Advertisment

அந்த கதாபாத்திரம் இதுவரை செய்ததில் இதுதான் பெரிய சம்பவம் எனச் சொல்லி ஜப்பானை தேடுகிறார்கள் போலீசார். அவரை இறுதியில் பிடித்தனரா, அவர் யார் என்பதையும் எதற்காக திருடினான் என்பதையும் விரிவாக காட்டியிருப்பது போல் அமைந்துள்ளது. இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

raju murugan Japan movie actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe