Advertisment

ஹீரோ; காமெடியன்; வில்லன் - எல்லாம் கலந்த கலவையாக கார்த்தி

karthi japan movie character Intro Video released

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில், கதாபாத்திர அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கையில் ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். மேலும் அந்த கதாபாத்திரம் குறித்து முதல் காட்சியில் ஹீரோ என்பது போலவும் அடுத்த காட்சியில் காமெடியன் என்பது போலவும் அதற்கடுத்த காட்சியில் வில்லன் என்பது போலவும் வெவ்வேறு கதாபாத்திரம் அடையாளப்படுத்தப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் கார்த்தியின் பிறந்தநாளான இன்று இதை வெளியிட்டதால் அவரது ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்துள்ளது. அதனால் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisment

இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என, கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 'அயலான்' படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து தற்போது தீபாவளி ரேசில் ஜப்பான் படமும் இணைந்துள்ளது.

raju murugan Japan movie actor karthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe