Advertisment

குலு மணாலியில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி நடிகர் கார்த்தி தவிப்பு !

karthi

நடிகர் கார்த்தி நடிக்கும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பிற்காக கார்த்தி மற்றும் படக்குழுவினர் அனைவரும் தற்போது குலு மணாலிக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் குலு மணாலியில் ஏற்பட்டுள்ள கன மழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நடிகர் கார்த்தி உட்பட 'தேவ்' படத்தின் படக்குழுவினர் சுமார் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் படப்பிடிப்புக்கள் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி பேசும்போது....

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

"தேவ்' படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார், பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4ல் இருந்து 5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவர்கள், சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது. 23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது" என்றார் நடிகர் கார்த்தி. இந்த பாதிப்பால் பட தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு 11/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

dev karthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe