Advertisment

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் கார்த்தி!

bvjhgkgh

கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'புலிக்குத்தி பாண்டி'. நேரடியாக சன் டிவியில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், முத்தையா அடுத்து இயக்கும் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை ‘புலிக்குத்தி பாண்டி’ படத்திற்கு முன்னதாகவே கார்த்தியிடம் முத்தையா கூறிவிட்டதாகவும், கார்த்தியின் கால்ஷீட் காரணமாக இப்படம் தாமதமாக தொடங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

Advertisment

தற்போது, இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில் வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முத்தையா திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ மற்றும் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு ஒரே நேரத்தில் சர்தார் மற்றும் முத்தையா படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். முத்தையா - கார்த்தி கூட்டணியில் முன்னர் வெளியான ‘கொம்பன்’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

actor karthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe