Advertisment

கண்கலங்கிய கார்த்தி - ஆறுதல் படுத்திய ஜெயம் ரவி; பாசப்பிணைப்பில் சோழர்கள்

Karthi gets emotional at ponniyin selvan 2 event

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக நாளை (28.04.2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

அதற்காக இந்தியா முழுவதும் மும்பை, ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தனர் படக்குழுவினர். ஒரு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி எமோஷனலாக கண்கலங்கினார். அவரை விக்ரம் சமாதானப்படுத்தினார். மற்றொரு நிகழ்ச்சியில் மணிரத்னம் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசுகையில் திடீரென்று மணிரத்னம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் ஐஸ்வர்யா ராய். இது போன்ற பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தது.

Advertisment

அந்த வகையில் மற்றொரு சுவாரசியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. நாளை படம் வெளியாகவுள்ளதால் கடைசியாக நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கண்கலங்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கார்த்தி 135 நாள் படக்குழுவுடன் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வுகளை பற்றி பேசியிருந்தார். அப்போது திடீரென எமோஷனலாகி கண்கலங்க தொடங்கிவிட்டார். அதை பார்த்த ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் அவரை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கு அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் காலை 9 மணி முதல் முதல் காட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

actor karthi jayam ravi Ponniyin Selvan 2
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe