Skip to main content

சண்டக்கோழி 2வில் கார்த்தி....லிங்குசாமி வெளியிட்ட புதிய தகவல் 

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
lingusamy

 

 

 

விஷால், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள 'சண்டக்கோழி 2' படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ள இப்படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்து பணியாற்றியுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...."சண்டக்கோழி 2' படத்தில் பின் குரல் கொடுத்ததற்காகவும், இப்படக்குழுவில் இணைந்தமைக்காகவும் கார்த்திக்கு எனது சிறப்பு நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நாயகனுடன் படம்...! மீண்டும் இயக்கும் குட்டிப்புலி நடிகர்

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக மாறிய மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி வரிசையில் இப்போது  இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.

 

saravana sakthisss


தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்த இவர் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெற்று வசூல் செய்தது. இதையடுத்து அவர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் சமீபத்தில் ஆர்.கே சுரேஷ் நடிப்பில் அஜித் ரசிகரை மையப்படுத்தி உருவான பில்லா பாண்டி படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் இவர் நடிப்பதற்கிடையில் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்பரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

 

Next Story

'அவர் என்னை பார்த்து கல்லூரி மாணவி போல் இருக்கிறாய் என்றார்' - வரலட்சுமி சரத்குமார் 

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
varalakshmi

 

 

 

நடிகை வரலட்சுமி நாயகியாக இல்லை என்றாலும் தற்போதுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிசி நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்தவகையில் இவர் நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 'சண்டக்கோழி 2' படத்தில் தான் ஏற்ற வில்லி வேடம் குறித்து அவர் பேசியபோது... "சண்டக்கோழி 2 படத்தில் நடிகர் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னிடம், உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல்  இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு மிகுந்த அதிர்ச்சி ஆனது. இதனால் உடனே எனது எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன்" என்றார்.