karthi food centre at 500th day

Advertisment

கார்த்தி தற்போதி நலன் குமரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். இதனிடையே தனது மக்கள் நல மன்றம் சார்பாக மக்களுக்கு உதவிகளையும் வழங்கி வருகிறார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும்உணவு வழங்கப்பட்டு வருவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பராமரிப்பு பணிகள் காரணமாகப் போதிய இட வசதி இன்மையால் சில மாதங்களாகச் செயல்பட முடியாமல் இருந்து வந்த உணவகம் தற்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில்மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று (17.02.2024) இந்த உணவகம் தொடங்கி 500வது நாள் நிறைவடைகிறது.