Advertisment

முதல் முறையாக பாராளுமன்றத்தில் கார்த்தி படத்தின் சூட்டிங்... அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Karthi film in the Parliament of the International Country

Advertisment

'சுல்தான்' படத்திற்குப்பிறகு கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குநர் மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்திலும் நடித்து வருகிறார். 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் 'சர்தார்' படக்குழு இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத அசர்பைசான் நாட்டின் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பை நடத்தியுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் முக்கியமான காட்சிகளை அசர்பைசான் நாட்டில் படமாக்கியுள்ளனர். மேலும் ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்த படப்பிடிப்பிற்காக மட்டும் ரூ.4 கோடி செலவு செய்துள்ளார்கள். இதனையடுத்து தற்போது சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுவரும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ps mithran Sardar actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe