Advertisment

தீபாவளிக்கு வெளியாகும் கார்த்தி படம் ; போஸ்டருடன் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Karthi film to be released for Deepavali; The crew released the update with the poster

.

'சுல்தான்' படத்திற்கு பிறகு கார்த்தி 'விருமன்' படத்தில் நடித்துமுடித்துள்ளார். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இயக்குநர் மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்திலும் நடித்து வருகிறார். 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

Advertisment

இந்நிலையில் 'சர்தார்' படத்தின் இரண்டாவது லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி.தெரிவித்துள்ளார். அதோடு படத்தின் இரண்டாவது லுக்கையும் பகிர்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Sardar ps mithran actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe