"என்னுடைய ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளது" - கார்த்தி

karthi facebook page has been hacked

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி இந்தாண்டு வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற 'விருமன், 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' உள்ளிட்ட படங்களைக் கொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="8fed3ad8-e61c-46f9-bc58-969aba4faf37" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/NMM-500x300_0.jpg" />

இந்நிலையில், கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், தனது ஃபேஸ்புக் ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனைசரிசெய்ய ஃபேஸ்புக் டீமுடன் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் பட ஃபர்ஸ்ட் லுக் இன்று (14.11.2022) வெளியாகவுள்ள நிலையில் அவரது ஐடி ஹேக் செய்யப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் முன்னதாக திரைப்பிரபலங்கள் அமிதாப்பச்சன், தனுஷ், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலரின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு பின்பு சரியாகி விடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கார்த்தியின் ஐடியும் விரைவில் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor karthi
இதையும் படியுங்கள்
Subscribe