10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் கார்த்தி?

karthi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே கார்த்தி நடித்து வந்த பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் கார்த்தி அடுத்ததாக, ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமடைந்த மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கார்த்தி கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ‘சிறுத்தை’ படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

actor karthi
இதையும் படியுங்கள்
Subscribe