Karthi Birthday and his Fans in welfare support

கார்த்தி வருகிற மே 25 ஆம் தேதி நடிகர் பிறந்தநாள் காண்கிறார். இதற்காக இவரது ரசிகர்கள் தமிழகம் முழுக்க 300க்கும் மேற்பட்ட நலத்திட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

முதலாவதாக மே 12 ஆம் தேதி சென்னையில் உள்ள வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் நீர் மோர் வழங்குதல், முதியோர் இல்லத்தில் அன்னதானம், குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மே-19, மே-26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம், நீர்மோர் வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், மரக்கன்றுகள் வழங்குதல், விதைப்பந்துகள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உதவுதல், கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அன்னதானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

குறிப்பாக மே 25 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரத்த தானம் மற்றும் உடல் தானம் செய்ய இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இரத்த தானம் செய்ய இருக்கிறார்கள்.