தமிழில் பாபநாசம் படத்தை நடிகர் கமலை வைத்து இயக்கிய ஜீத்து ஜோசப் அடுத்து நடிகர் கார்த்திக், ஜோதிகா வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Advertisment

karthi jyothika

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ஜீது ஜோசப் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தாலும் தமிழில் அவருக்கு இது இரண்டாவது படம். இன்னும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை, சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இந்த படம் குறித்து இதுவரை தகவல்களே வந்த நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, “ அண்ணியுடன் முதல் படத்தில் இணைந்து நடிக்க இருப்பது த்ரில்லாக இருக்கிறது” என்றார்.

Advertisment

நடிகர் சூர்யா இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு, “அதனுடன் மிகச்சிற்பான தருணம்,கார்த்தியையும் ஜோதிகாவையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பதிவில், மிகச்சிறப்பான தருணம். கார்த்தியையும் ஜோதிகாவையும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.