“உண்மையாவே அப்படி இருக்காங்க” - விஜயகாந்த் படத்தை நினைவுகூர்ந்து கார்த்தி வியப்பு

புதுப்பிக்கப்பட்டது
38

ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் நாயகன் ருத்ரா விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூலை 11ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். அந்த வகையில் கார்த்தி பேசியதாவது, “இங்க வந்ததுக்கு அப்புறம்தான் விஷ்ணு விஷாலின் குடும்ப கதையைக் கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. அதை கேட்கும் போது, எனக்கு வானத்தை போல படம் பார்த்த நியாபகம் வந்துடுச்சு. அந்த படம் பார்க்கும் போது, இப்படிலாமா அண்ணன் தம்பிங்க இருப்பாங்க... ஓவரா இருக்கேன்னு நினைச்சேன். ஆனால் உண்மையாவே அப்படி இவங்க இருந்திருக்காங்க. 

ஒரு அண்ணன் இருப்பது பெரிய ஸ்பெஷல்தான். அந்த வகையில் எனக்கு அண்ணன் கிடைச்சது நான் ரொம்ப லக்கி. நிறைய விஷயங்களை அவங்கள பார்த்து கத்துப்போம். நாம யோசிக்காத விஷயத்தை நமக்காக அவங்க யோசிச்சு பண்ணியிருப்பாங்க. நான் இங்க வந்ததற்கு காரணமும் அதுதான். என்னோட முதல் படம் அறிவிக்கும் போது எனக்கு நிறைய அன்பு கிடைச்சது. அதனால் யாராவது புதுசா சினிமாவுக்கு வந்தா அந்த அன்பை திருப்பி கொடுக்க நினைப்பேன். அதனால் ருத்ராவுக்கு எனது வாழ்த்துக்கள்.   

பட ட்ரெய்லரை பர்க்கும் போது ஒரு யூத் அண்ட் எனெர்ஜி தெரிஞ்சுது. எல்லோரும் இப்போது சீரியஸ் சினிமாவை நோக்கி போய்கிட்டு இருக்கோம். வெற்றிமாறன் தான் அதற்கு காரணம். அவர் எடுக்குற படங்கள் பலருக்கு அப்படி இன்ஸ்பைரா மாறிடுச்சு. ஆனால் தியேட்டருக்கு வரவங்க எல்லாரும் ஜாலியா இருக்கனும்னு தான் வராங்க. நம்ம காலேஜ் படிக்கும் போதும் அப்படித்தான் படங்கள் வந்துச்சு. அந்த மாதிரி இந்த படம் இருக்கும்னு நினைக்கிறேன். அன்போடு எது பண்ணாலும் ஆடியன்ஸிடம் இருந்து அது டபுள் மடங்கா திரும்ப கிடைக்கும். வெளியில் இருந்து வர நெகட்டிவிட்டியை விட உள்ளே இருந்து வர நெகட்டிவிட்டித்தான் அதிகம் இருக்கும். அதனால் மனதை ஸ்ட்ராங்கா வச்சுக்க வேண்டும். இன்னைக்கு நிறைய லவ் இருக்கும். ஆனால் ரிலீஸூக்கு பிறகு எல்லாமே மாறும். அதனால் தொடர்ந்து நினைச்சதை பன்னிக்கிட்டே இருங்க. விஷ்ணு விஷாலுக்காக இங்கு வந்திருக்கேன். இந்த படத்திற்காக அவர் என்னெல்லாம் பன்னிருக்கீங்கன்னு தெரியும். அதுக்காக ஸ்பெஷலா மெடல் எல்லாம் கொடுக்கமாட்டாங்க” என கலகலப்பாக பேசினார். 

actor vishnu vishal karthi
இதையும் படியுங்கள்
Subscribe