மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை இயக்குநர் மித்ரனுக்கு பரிசாக வழங்கியிருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 1 ஆண்டைநிறைவு செய்கிறது.
இதையொட்டி கார்த்தி பகிர்ந்துள்ள வீடியோவில், விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து படக்குழு அறிவித்த நிலையில், விரைவில் அதுபற்றிய புது அப்டேட்டை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.