Advertisment

“ரொம்ப நாள் ஆசையை நிறைவேற்றி வச்சிட்டார் லோகேஷ்” - கார்த்தி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்...

தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் கைதி. இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. எஸ்.ஆர். பிரபு சார்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் அவரது நெருங்கிய நண்பர்களான நரேனும், ரமணா நடித்திருக்கின்றனர்.

Advertisment

karthi

தீபாவளி ரிலீஸுக்கு தயாரகியிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட கார்த்தி படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்தார். அப்போது படத்தில் தான் லாரி ஓட்டிய சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

Advertisment

alt="puppy" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3af81090-e628-4a7c-8f39-b86e9136dd3e" height="265" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_10.jpg" width="442" />

“எனக்கு ரொம்ப நாளா லாரி ஓட்ட வேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறியுள்ளது. படம் முழுவதும் லாரி ஓட்டிக்கிட்டு இருக்கேன். ஆனால், லாரி ஓட்டும்போதுதான் தெரிய வந்தது. லாரி ஓட்டுனர்கள் எவ்வளவு பெரிய ரிஸ்க்கான தொழிலை செய்கிறார்கள் என்று. என்னப்பா லாரி நிக்காம போயிட்டான் என்று சொல்வார்கள். அவங்க வேண்டும்னு பன்றதில்லை, பிரேக் பிடித்தால் நிற்கமாட்டிங்குது. இந்த படத்தில் எனக்கு பழைய லாரிதான் கொடுத்தார்கள். பவர் ஸ்டேரிங் இல்லாத லாரி. அது நினைக்கும்போதுதான் நிற்குது. நீங்கள் முன்பே பிளான் செய்தால்தான் லாரியை நிறுத்த முடியும். அதுலேயே இந்த படத்தில் ஆக்‌ஷன் செய்திருக்கிறோம். அதுவும் லைவ் ஆக்‌ஷன் செய்திருக்கிறோம். இது எனக்கு பயங்கர த்ரில்லாக இருந்தது” என்று கூறினார்.

alt="sss" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="72301dbf-568c-41b7-9242-2709f667e002" height="282" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_7.jpg" width="470" />

கைதி படத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், அன்பறிவ் சண்டை பயிற்சியாளர்களாகவும், பிலோமின் ராஜ் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர். ட்ரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே ட்ரெண்டாகி தற்போது வைரலாகி வருகிறது.

kaithi actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe