Advertisment

கார்த்தியின் 25வது படம் - தேசிய விருது இயக்குநருடன் கைகோர்த்தார்

karthi 25th film titled as japan

Advertisment

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பைப் பெற்றது. இதில் 'பொன்னியின் செல்வன்' ரூ.430 கோடியும் மற்றும் 'சர்தார்' படம் ரூ.100 கோடியும் உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கார்த்தியின் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே ராஜு முருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார் எனத்தகவல் வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ஜப்பான்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்குஜோடியாகஅனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கார்த்தியின் 25வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

முன்னதாக ராஜு முருகன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' படம், 64வது தேசிய விருது விழாவில் 'சிறந்த தமிழ்ப் படம்' என்ற பிரிவில் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Japan movie anu emmanuel raju murugan actor karthi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe