முதல் முறையாக ஹீரோயினே இல்லாதா படத்தில் நடிக்கும் கார்த்தி !

karthi 18

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

'தேவ்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி அடுத்ததாக 'மாநகரம்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்சமயம் கார்த்தி 18 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. கதாநாயகியே இல்லாத இப்படத்தில் 'அஞ்சாதே' நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகிறது. படத்தில் 70 சதவிகிதம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இருப்பதால் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் இதற்காக பிரத்யேக காட்சிகளை அமைக்கிறார். சென்னை மற்றும் திருநெல்வேலி சுற்று வட்டார பகுதிகளில் படமாகும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

lokesh kanagaraj karthi18
இதையும் படியுங்கள்
Subscribe