Skip to main content

கடைசி நேரத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு வந்த சிக்கல்; சுதாரித்த திரையரங்க விநியோகஸ்தர்கள்

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

 karnataka state rrr movie issue

 

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான "ஆர்ஆர்ஆர்" திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ,கன்னடம் ஆகிய மொழிகளில்  மார்ச் 25ஆம் தேதி (நாளை)  பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படம்  தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான காலகட்ட போர் கதையாகும் . ராம் சரண் அல்லூரி சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாக நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின்  ஆலியா பட், அஜய் தேவ்கன், அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. அந்தந்த மாநிலங்களில் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் மாநில மொழிகளில்தான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில்  மட்டும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிக திரையரங்குகளிலும், கன்னட மொழியில் குறைவான திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கு கன்னட மொழி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கன்னட மொழி ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான முன்பதிவும் தொடங்கப்படாமல் இருக்கவே படக்குழு கன்னட மொழியை புறக்கணிப்பதாக கூறிய ரசிகர்கள் ட்விட்டரில் #BoycottRRRinKarnataka என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

 

இந்நிலையில் சுதாரித்துக்கொண்ட  திரையரங்க விநியோகஸ்தர்கள் "ஆர்ஆர்ஆர்"  கன்னட பதிப்பிற்கு  முன்பதிவை தொடங்கியுள்ளனர். இது கன்னட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே மாதிரியான சிக்கல் புஷ்பா, ராதே ஷ்யாம் ஆகிய படங்களும் எழுந்ததாக கன்னட ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு போல் ராம் சரணுக்குக் கிடைத்த கௌரவம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ram charan get honorary doctorate same like simbu

தெலுங்கு திரையுலகில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்து முனனணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ராம் சரணை கோலிவுட் ரசிகரகளிடம் பிரபலமாக்கியது.  

இதையடுத்து மீண்டும் ராஜமௌலி இயக்கத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் உலக அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் வென்று இந்தியத் திரையுலகில் சாதனை படைத்தது. 

ராம் சரண் இப்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படமும், சுகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், திரைப்படத் துறை மற்றும் சமூகத்திற்கு ராம்சரண் ஆற்றிய சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது. அப்போது நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் சிம்புவின் சாதனையைக் கவுரவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story

'கே.ஜி.எஃப் ஓனர்...’ - கேம் சேஞ்சரில் ராம் சரண் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
shankar ram charan game changer Jaragandi lyric video released

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம், படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இரண்டு நபர்களைக் கைது செய்தது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்பு வெளியாகவில்லை. 

இந்த நிலையில், 'ஜரகண்டி' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இன்று ராம் சரணின் பிரந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகப் படக்குழு இப்பாடலை வெளியிட்டுள்ளது. மேலும் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. இப்பாடல், ஷங்கர் படத்தில் வழக்கம் போல் இடம்பெறும் காதல் குத்து பாடலாக அமைந்துள்ளது. மேலும் பிரம்மாண்டமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் இடையில் காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை தலேர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் ஆகியோர் பாடியுள்ளனர். முதலில் தெலுங்கு பதிப்பு வெளியானதை அடுத்து தற்போது தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. அடுத்ததாக இந்தி பதிப்பும் வெளியாகவுள்ளது. 

தமிழ் பதிப்பிற்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்து அதிக வரிகள் இடம் பெற்றுள்ளன. ‘வெள்ளை தங்கம் கே.ஜி.எஃப் ஓனர் நான்டி..., சிஸ்டம் சறுக்குனா மொறப்பான்டி, தண்டர் ஸ்டார்ம போல் டிண்டர் சீமையில் சொழண்டது வேற யாருடி...’ போன்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.