/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/321_33.jpg)
கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த வருடம் 29/10/2021 அன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்கியது.
திரைத்துறையில் தனது நடிப்பால் பல்வேறு விருதுகளை பெற்றதோடு, சமுதாயத்திலும் கண் தானம், ஏழைகளுக்கு உதவுதல், இலவச பள்ளிக்கூடம், முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் என அவரின் செயலால் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவே இருந்து வருகிறார்.திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாகமைசூர் பல்கலைக்கழகம் புனித் ராஜ்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்வழங்கியுள்ளது. இதனைஅவரது மனைவி அஸ்வினிபுனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மறைந்த புனித் ராஜ்குமாரைகௌரவிக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு படமாக வைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாக அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)