“சூர்யாவின் 'ஜெய் பீம்' என் மனதை தொட்டுவிட்டது” - கர்நாடக முன்னாள் முதல்வர் பாராட்டு

karnataka ex cm kumaraswamy parside surya jaibhim

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ‘ஜெய் பீம்’ திரைப்படம், குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாக சித்தரித்திருப்பதாகக் கூறி சர்ச்சைகளையும் கிளப்பியது. இருப்பினும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள்எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டியிருந்தனர். சர்வதேச அரங்கில் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்று பின் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெய் பீம் படத்தை கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பாராட்டியுள்ளார். அதில் “அவசரகதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, பாரபட்சமில்லாமல் கைது செய்வது, ஜாமீன் பெறுவதில் ஏற்படும் சிரமம் உள்ளிட்ட விஷயங்களை சூர்யாவின் ஜெய்பீம் படம் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாககொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் படம் மனித குலத்திற்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜெய் பீம் என் மனதை தொட்டு விட்டது" எனக் கூறியுள்ளார்

actor surya jaibhim karnataka cm kumarasamy
இதையும் படியுங்கள்
Subscribe