Advertisment

தெலுங்குக்கு போகும் ‘கர்ணன்’! ஹீரோ யார் தெரியுமா?

cvsfvsa

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. விகிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

திரையிட்ட இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் 'கர்ணன்' படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், 'கர்ணன்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். இதில் இவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mvjvj

Advertisment

நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் ஏற்கனவே ‘சுந்தரபாண்டியன்’, ‘ராட்சசன்’ போன்ற தமிழ் படங்களை ரீமேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதேபோல் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான 'அசுரன்' படமும் தெலுங்கில் ‘நாரப்பா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

karnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe