/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/117_5.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். U/Aதணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், கர்ணன் படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை நடிகர் மோகன்லால் கைப்பற்றியுள்ளார். ஏப்ரல் 9-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதை முன்னிட்டு கர்ணன் படக்குழுவினருக்கு மோகன்லால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)