/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/46_12.jpg)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாகபடப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார், இயக்குநர் மாரி செல்வராஜ்.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையடுத்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இசைக்கோர்ப்பு பணியில் கவனம் செலுத்தி வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் படத்தைப் பார்த்து, தான் வியந்து போனதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தெரிவித்ததும் உற்சாகமான தனுஷ் ரசிகர்கள், தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)