மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பைரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிலையில், ‘கர்ணன்’ படத்தின் தணிக்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கர்ணன்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இத்தகவலைஇயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.