/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EwCNjwoUUAMfeL9.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாகப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க...’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இவ்விரு பாடல்களுக்கும் கிடைத்த வரவேற்பு, படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'திரௌபதையின் முத்தம்' எனப் பெயரிடப்பட்டுள்ள பாடல், மார்ச் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை, இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)