/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/76_7.jpg)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார், இயக்குநர் மாரி செல்வராஜ்.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததை அடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை (18.02.2021)இரவு, 8 மணிக்கு கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் வெளியாகிறது. இத்தகவலை, இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)