Advertisment

கர்ணன் பர்ஸ்ட் லுக்! இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ்!

vdgdg

Advertisment

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.

Danush karnan
இதையும் படியுங்கள்
Subscribe