
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திருநெல்வேலி அருகே பிரமாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கரோனா காரணமாக படத்தின் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், எஞ்சியுள்ள காட்சிகளைச் சென்னையில் படமாக்கினார்இயக்குநர் மாரி செல்வராஜ்.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையடுத்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை ஜனவரி 31ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)